வடமாகாணப் பாடசாலை அதிபர்களுக்கு வடக்கு கல்வி அமைச்சினால் விஷேட சுற்று நிருபம்!

Saturday, November 26th, 2016
வடமாகாணக் கல்வியமைச்சிற்குட்பட்ட 12 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன் அவர்களால் சுற்று நிருபம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விழாக்கள், நிகழ்வுகள், போட்டிகள் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களே சுற்றுநிரூபம் வயிலாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுற்று நிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்குப் பெண் ஆசிரியையொருவர் இருப்பது கட்டாயமானதாகும். வெளி நிகழ்வுகள், விழாக்கள், போட்டிகள் ஆகியவற்றிற்கு மாணவிகளை அழைத்துச் செல்லும் போது பெண் ஆசிரியையொருவர் அல்லது இருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கு அதிபரே பொறுப்புக் கூறுபவராக இருக்க வேண்டும்.விழாக்கள், பாடசாலை நிகழ்வுகள், பாடசாலை நேரத்தை வீணடிக்காது வகுப்பறைகள் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பேற்படாதிருப்பதையும் அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

பாடசாலை நிகழ்வுகளைப் பாடசாலை வேளைகள் பாதிப்புறாவண்ணம் மாலை வேளைகளில் ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும். பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் சனி மற்றும் விடுமுறை நாட்களிலும் நடாத்தப்படும் மேலதிக வகுப்புக்கள், விளையாட்டுத் துறை சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகள் போன்ற அனைத்துச் செயற்பாடுகளையும் பாடசாலை அதிபரின் முழுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலை ஆசிரியர் அல்லாத ஒருவரைப் பயிற்றுவிப்பாளராகப் பயன்படுத்தும் பட்சத்தில் உரிய அனுமதி பெறப்பட்டிருப்பதுடன், பயிற்றுவிப்பாளர் தொடர்பான முழுமையான விபரங்கள்பேணப்பட வேண்டும் எனவும் இந்தச் சுற்றுநிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

north

Related posts: