வடமாகாணத்தில் முப்படையினர், பொலிஸாரின் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

வடமாகாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன வடமாகாண முதலைமைச்சர் க. வி. விக்கினேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.
வடமாகாணத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் , அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் , அரசுக்குச் சொந்தமான காணிகள் என மூன்று பகுதிகளின் கீழ் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன .
வடமாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள் , உள்ளுராட்சிச் ஆணையாளர், சபைச் செயலாளர்கள் ஊடாகச் சகல விபரங்களும் திரட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் தொடர்பில் 5,236 முறைப்பாடுகள் பதிவு - தேசிய தேர்தல் ஆணையகம் தகவல்!
தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி - மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பான...
|
|