வடமாகாணத்தில் பாரிய தொழில் துறையினை ஆரம்பிக்க நடவடிக்கை: தொழில் துறை உறவுகள் இராஜாங்க  அமைச்சர் !

Friday, July 1st, 2016

இளைஞர்களின்  தொழில்வாய்ப்பினைப்  பெற்றுக்கொடுப்பதற்காக   வடமாகாணத்தில் பாரிய தொரு தொழில் துறையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத்  தொழில் துறை உறவுகள் இராஜாங்க  அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன்  கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களிலும் தொழில் துறை வாய்ப்பினைப்  பெறுவதற்கான தொழில் துறைசார் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 32 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பின்றிக் காணப்படுகின்றனர். அவற்றில் பலர்  தொழில் துறைக்கான கற்கை நெறியின்றிக்  காணப்படுகின்றனர். குறிப்பாக இங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற தொழில் துறை மையம் யாழ். மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களில் தொழில் துறையினைப்  பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்காக யாழ். மாவட்டச்  செயலகத்தில் திறந்துவைத்து கருத்து அதரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதன் ஊடாக வேலை வாய்ப்பினைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர் ,யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.  எதிர்வரும் அடுத்த மாதமளவில் யாழ். மாவட்டத்திற்காகத்  தொழில் தேடுவர்களுக்கான மையம் ஒன்றையும் அமைக்கவிருக்கின்றோம் என்றார்.

மேற்படி நிகழ்வில் தொழில் துறையினைத்  தேடும் இளைஞர்கள் ,யுவதிகள் மாவட்டச்  செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒரு படிவத்தினைப்  பூர்த்தி செய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் இளைஞர்  யுவதிகளைக்  கேட்டுக்கொண்டார்.

இந்தநிகழ்வில் தொழில் துறை உறவுகள், அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தர்மனே, மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள்,யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப. செந்தில் நந்தனன் எனப் லரும் கலந்துகொண்டனர்.

e82e2596-3d3c-4bc6-bdf2-4b8dfb2263ce

870e1501-d6cc-40cb-a9bd-d7ba0fdf75a6

Related posts: