வடமாகாணத்தில் டெங்கு தொற்றியிருக்கலாம் என்று 5,339 பேர் சிகிச்சை!

Tuesday, January 22nd, 2019

வடக்கில் கடந்த வருடம் தமக்கு ஏற்பட்ட காய்ச்சல் டெங்காக இருக்கலாம் என்ற அடிப்படையில் 5 ஆயிரத்து 339 நோயாளர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலேயே அதிகமாக உள்ளது என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிபர பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த வருடம் யாழ் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 58 பேர் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியாவில் 603 பேரும் கிளிநொச்சியில் 342 பேரும் மன்னார் மாவட்டத்தில் 223 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும் இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இலங்கையில் கடந்த வருடம் 51 ஆயிரத்து 448 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் அதிக எண்ணிக்கையானோராக கொழும்பில் 10 ஆயிரத்து 261 நோயாளர்களும் கம்பகாவில் 5 ஆயிரத்து 836 பேரும் மட்டக்களப்பில் 4 ஆயிரத்து 843 பேரும் கண்டியில் 3 ஆயிரத்து 828 பேரும் களுத்துறையில் 3 ஆயிரத்து 103 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: