வடமாகாணத்திற்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி,நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றிற்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதிய செயலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கினார்.
சிவலிங்கம் சத்தியசீலன் கல்வி அமைச்சின் செயலாளராகவும் கந்தையா தெய்வேந்திரன் விவசாய அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
அனைத்து கட்சிகளும் இணங்கினால் உள்ளுராட்சி பழைய முறையில் தேர்தல் நடத்தலாம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
கொழும்பில் பதற்றம் - மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!
|
|