வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று மின்தடை!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி, இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் காரைநகர் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும் ,
இன்று காலை-09 மணி முதல் மாலை-05 மணிவரை கிளிநொச்சி மாவட்டத்தின் வற்றாப்பளை , கேப்பாப்பிலவு, நாவற்காடு(முள்ளியவளை), விமானப்படை-1 மற்றும் விமானப்படை-2, 59 ஆவது படைப்பிரிவு(14ESR-01 மற்றும் 14ESR-02) முகாம்கள், SFHQ வற்றாப்பளை, CLI நந்திக்கடல், நந்திக்கடல் 16 ESR படைப்பிரிவு ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குள கிராமம், வேளாங்குளம், வேளாங்குளம் விமானப்படை முகாம், மடுக்குளம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை !
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
வி.எம்.எஸ் கண்காணிப்புக் கருவிகள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கைக்கான அவுஸ்ர...
|
|