வடமாகாணத்தின் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை 

Sunday, October 22nd, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய  மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) காலை முதல் மாலை வரை மின்சாரத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்.மாவட்டத்தில் ஊரெழு, பொக்கணை, உரும்பிராய், உரும்பிராய் கிழக்கு, கரந்தன், போயிட்டி ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08.30 மணி தொடக்கம் மாலை-05.30 மணி வரை கிளிநொச்சி NAITA, அறிவியல் நகர் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னாரில் மன்னார் நகரம்,  திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு, பள்ளிமுனை, சிறுநாவற் குளம், நாகதாழ்வு,ஆவேமேரியா ஐஸ் தொழிற்சாலை, மன்னார் இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம்,மன்னார் மாவட்டச் செயலகம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை வவுனியாவில் இலுப்பையடி, பஸார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, பட்டானி சூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திரகுளம் வரை, ஒமேகா லேன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, தாண்டிக்குளத்திலிருந்து சின்னவலயங்கட்டு வரை, மறக்கறம்பளையிலிருந்து மணிபுரம் வரை, முள்ளிக்குளம், கீரிசுட்டான், நொதேர்ண் பாம், ஆசிரியர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


வெளி இடங்களிலிருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பிரதி பொல...
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு!
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி - ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்த...