வடமாகாணசபையின் விசேட அமர்வு மாற்றம் !

Friday, September 1st, 2017

 

வட மாகாணசபையின்  கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று வியாழக்கிழமை(31) இடம்பெறவிருந்த விசேட அமர்வு அடுத்த மாதம்-04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

வட மாகாணசபையின் கடந்த மூன்று வருடங்கள்  ஒன்பது மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வுகள் இரண்டு நடந்தேறியிருக்கும் நிலையில் மூன்றாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெறுவதாகவிருந்தது.  இந்நிலையிலேயே  குறித்த அமர்வு எதிர்வரும்- 04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாகாணசபைகளை முடக்கும் சட்டமூலம் என விமர்சிக்கப்பட்டு வரும் 20 ஆவது சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts: