வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வடமராட்சி மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரின் விளக்கமறியல் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்றில் இன்றுநடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதியால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களில் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவர் இயக்கச்சி கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அத்துடன் மீனவர்கள் 21 பேரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை யாழ்.சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதிபதி வழங்கியுள்ளார்.
அதேவேளை, இந்திய மீனவர்களிடம் இருந்து 100 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றை விற்பனை செய்து அதில் வரும் பணத்தினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்போது மீனவர்கள் 21 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|