வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு:  ஒருவர் பலி!

Sunday, July 9th, 2017
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) மாலை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 24 வயதுடைய இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞர்  உழவியந்திரமொன்றில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்துள்ள நிலையில் பருத்தித்துறைப் பொலிஸார் மறித்த போதும் நிற்காத காரணத்தால் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவத்தையடுத்துப் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Related posts: