வடமராட்சியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை!
Friday, April 9th, 2021கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் நேற்று காலை 8 மணிக்கு கரை திரும்பவேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையுமே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
யாழ்.மாவட்டத்திலும் பசுமை நிகழ்ச்சித் திட்டம்!
இலங்கையில் கையடக்கத் தொலைபேசி இணையத்தள பாவனை அதிகரிப்பு!
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!
|
|