வடபகுதிவீடமைப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு!

வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உத்தேச 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் அமர்வில் இருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளனர்.
மஹ்முட் பாஸில் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். பிரான்ஸின் ஆச்செலர்மிட்டால் நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள இந்த வீடுகளுக்கு 97 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்றில் பிரதிவாதிகளின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் பிரதிவாதி நீதிமன்றத்தை அவமதிக்கும்வகையில் பிழையான புள்ளிவிரபங்களை காட்டியுள்ளதாகவும் மன்றில் பிரதிவாதி தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில் சட்ட அடிப்படையில்லை என்ற அடிப்படையில் மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
|
|