வடபகுதியில் திட்டமிட்டமுறையில் மணல் அகழப்பட்டுவருவதால் சூழலுக்குபாதிப்பு.
Sunday, April 30th, 2017
கிளிநொச்சி,முல்லைத்தீவுமாவட்டங்களின் சிலபகுதிகளில் திட்டமிட்டமுறையில் மணல் அகழப்பட்டுவருவதால் கிராமங்கள் முழுமையாகஅழிவடையும் நிலை தோன்றியுள்ளதாகவும், இதுவிடயத்தில் சம்பந்தப்பட்டோருக்குபலமுறைதெரியப்படுத்தியிருந்தபோதிலும் அவர்கள் அக்கறையற்று இருக்கின்றமையானதுதமக்குமிகுந்த வேதனையைத் தருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிளிநொச்சிஅக்கராயனில் சுபாஸ் குடியிருப்புப் பகுதியில் வகைதொகையின்றி சட்டவிரோதமாகமணல் அகழப்படுவதாகவும், இவ்வாறானநிலைமைகள் தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் கிராமம் முழுமையாகஅழிந்துபோகும் நிலைஏற்படக் கூடியவாய்ப்புகள் காணப்படுவதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்தபகுதியில் அகழப்படும் மணல் உழவு இயந்திரங்களிலும்,டிப்பர் வாகனங்களிலும் வெளியிடங்களுக்குகொண்டுசெல்லப்படுவதாகவும், இவ்வாறாகத் தொடரும் சட்டவிரோதமணல் அகழ்வைத் தடுத்துநிறுத்தமாறுசம்பந்தப்பட்டோருக்கபலமுறைதெரியப்படுத்தியிருந்தபோதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் படுகின்றது.
இதனிடையேமுல்லைத்தீவுமாவட்டத்தின் ஆரோக்கியபுரம் பாலங்குளத்தின் வயல் நிலப் பகுதிகளிலும், ஸ்கந்தபுரம் மணியங்குளத்தின் பின்பகுதியிலும் சட்டவிரோதமாகமணல் அகழப்பட்டுவருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறானசட்டவிரோதமணல் அகழ்வைதடுத்துநிறுத்தும் பொருட்டுதுறைசார்ந்தஅதிகாரிகள் மட்டத்தில் பல கூட்டங்கள் நடைபெற்றிருந்தபோதிலும் அவைவெறும் பேச்சுக்களாக இருப்பதாகவும், இந்நிலையில் இச்சட்டவிரோதமணல் அகழ்வுதொடர்ந்துநீடிக்கும் பட்சத்தில் அது இயற்கைக்கும்,சூழலுக்கும் பாதகமானசூழ்நிலையையேஉருவாக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|