வடபகுதிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம் – சீற்றத்தில் வடக்கின் இளைஞர்கள்!

Thursday, August 8th, 2019

வடமாகாண நில அளவை திணைக்கள ஊழியா்கள் வெற்றிடத்திற்கு நேற்றயதினம் 118 போ் நியமிக்கப்பட்ட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் பெரும்பாலானவா்கள் தென்னிலங்கையை சோ்ந்தவர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நியமனம் பெற்றவா்களில் 31 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும், ஏனைய 87 பேரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் உள்ள நில அளவைத் திணைக்கள அலுவலகங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்காகப் பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில், விண்ணப்தாரிகளிற்கு கொழும்பில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

அந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என பலரும் காத்திருக்கும் நிலையில் நேற்று 118 பேருக்குத் திடீரென நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் தலா 35 பேரும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 பேரும், மன்னார் மாவட்டத்துக்கு 13 பேரும், யாழ்ப்பாணத்துக்கு 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனங்களில் மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வடக்கில் பலர் நியமனங்களிற்காக காத்திருக்கையில் தென்னிலங்கையர்களிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளமை பலரிற்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: