வடக்கை விட்டு வெளியில் செல்ல முடியாது: நிபந்தனையுடன் தயா மாஸ்டருக்கு பிணை.!

Tuesday, August 16th, 2016

தினமும் யாழ் பொலிஸ் நிலை­யத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி­வ­ரைக்குள் கையொப் பமிட்­வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தனையுடனும் நீதிமன்றத்தால் புலிகளின் முன்னாள் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தயா­ மாஸ்டர் பிணையில் நேற்று மாலை விடுதலை செய்­யப்­பட் டார்.

அங்கீகரிக்கப்பட்ட பிணை­யா­ளர்கள் நீதி­மன்­றத்தில் கையொப்­ப­மிட்­ட­தை­ய­டுத்தே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் ­பு­லி­க­ளுடன் இணைந்து அர­சுக்­கெ­தி­ராக செயற்­பட்டார் என குற்றம் சாட்­டப்­பட்ட இவ­ருக்கு பயங்­க­ர­வாத செயற்பா­டு­களின் கீழ் தொடுக்­கப்­பட்ட வழக்கில் வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி புதிய பிணை நிபந்­த­னையை கடந்தவாரம் வி­தித்­தி­ருந்தார்.

இந் நிலையில் ஒரு லட்சம் ரூபா பொறு­ம­தி­யான நான்கு அரச உத்­தி­யோ­கத்­தர்­களை கொண்ட பிணை­யிலும் ஐந்து லட்சம் ரூபா ரொக்கப்­பி­ணை­யிலும் செல்ல நீதி­மன்றம் நேற்று உத்­தி­ர­விட்­டது.

இந் நிலையில் நான்கு அரச உத்­தி­யோ­கத்­தர்கள் நேற்று நீதி­மன்­றத்தில் கையொப்­ப­மிட்­ட­துடன் பணமும் நீதி­மன்­றத்தில் செலுத்தப்­பட்­டது அதன் பின்னரே தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனும­திக்­கப்­பட்டார்.

Related posts:


குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீளவும் தொற்று அறிகுறி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய தாழமுக்கம் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் வானிலையில் மாற்றம்!
காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் - இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!