வடக்கை மேம்படுத்த இருமடங்கு நிதி ஒதுக்கீடு – பிரதமர்!

Thursday, November 17th, 2016

யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை தரமுயர்த்துவதன் மூலம் அங்கிருந்து மேற்குலகு நோக்கிச் சென்றோரை மீண்டும் வரவழைக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ​ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை கடந்த வருடத்திலும் பார்க்க இரண்டு மடங்கு நிதி யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் விக்கிரமசிங்க இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேற்குலகில் வசிக்கும் தமிழ் டயஸ்போராக்கள் யாழ்ப்பாணத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு யுத்தத்தை காரணமாக வைத்து தமிழர்களும் சிறந்த வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுமாயின் இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வருவதில் எவ்வித ஐயமும் இல்லை. யுத்தத்திற்கு அஞ்சி நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் அழைக்கும் அடிப்படையில் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2009 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் வெ ளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஆட்கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றம் தொடர்பில் ஆராயும் பாளி மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் 11 வது உயர்மட்ட மாநாடு நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெருவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் இந்நிகழ்வில் மேலும் கூறியதாவது

ஆட்கடத்தல் உலக நாடுகள் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். எனினும் இப்பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்பட முடியாது. எனினும் தேசிய மட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு குறித்து நாம் சுதந்திரமடைந்தது முதல் இன்றுவரை அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

இது தொடர்ச்சியாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய செயன்முறையாகும். இதன்போது கடந்த காலம் குறித்து அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும். அரசியல், சட்டம் என அனைத்து தரப்பிலும் அவ்விடயத்தை சமப்படுத்தல் வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுப் பிரச்சினைக் காரணமாக பல தமிழர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். அதேநேரம் சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இனங்களைச் சேர்ந்தோரும் சிறந்த வாழ்கை முறையை தேடி மேற்கு நாடுகளுக்குச் சென்றனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் வேறுவிதமான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை எமக்கு நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் எவ்வாறு நாட்டுக்கு வரவழைப்பது என்பதிலேயே எமது முழுக் கவனமும் அமைந்துள்ளது.

ஐ.நா வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உரிமைகள் மற்றும் அதற்கான சட்ட நடவடிக்ைககள் செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளன. ஒரு இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ranil-pm-400-seithy2

Related posts: