வடக்கு விவசாயிகள் நெல் அறுபடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது – யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா அறிவுறுத்து!

Wednesday, January 5th, 2022

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ். பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளது. எனினும் எதிர்வரும் 9 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய சாத்தியகூறுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: