வடக்கு விவசாயிகளுக்கு நீர் முகாமைத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தல்!

Wednesday, October 25th, 2017

வறட்சியை எதிர்கொள்வதற்காக நீர் முகாமைத்துவம் குறித்து வடக்கு விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்கீழ் நடைமுறைப்பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று வவுனியா பாவற்குளத்தில் நடைபெற்றது.வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 பேர் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர்.

வறட்சி காலநிலைக்கு ஈடுகொடுக்க கூடிய பயிர் உற்பத்தி நீர் முகாமைத்துவம் , மாதிரி பயிர்ச்செய்கை குறித்து இதன்போது கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது.

சேதனப்பசளையை பயன்படுத்தி ஆக்கூடுதலான அறுவடையை பெற்றுக்கொள்ளுதல் நச்சுத்தன்மையற்ற விவசாய தயாரிப்புக்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக விவசாயிகளை ஊக்குவிப்பததே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts: