வடக்கு வருமான பரிசோதகர்களுக்கு இடமாற்றம்!

Saturday, June 23rd, 2018

வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிலையில் ஒரு சேவை நிலையத்தில் கடமையாற்றும் வருமான பரிசோதகர்கள் இடமாற்றம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

மாநகர சபை நகர சபை பிரதேச சபை உள்ளிட்ட 34 உள்ளுராட்சி சபைக்கு உட்பட்ட வருமான பரிசோதகர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

நியமனம் பெற்ற காலத்தில் இருந்து சில வருமான பரிசோதகர்கள் 10 வருடங்கள் முதல் 18 வருடங்கள் ஒரே சேவை நிலையத்தில் கடமையாற்றுகின்றனர். இந்த நிலையில் 5 வருடங்களுக்கு மேற்பட்ட வருமான பரிசோதகர்கள் விவரம் பெறப்பட்ட பின்னர் உடன் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Related posts: