வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் ஜனவரி 5 முதல் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் –வவுனியா வரை யாழ்ராணி சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிப்பு!
Tuesday, December 20th, 2022ஜனவரி மாதம் 5 ஆமு; திகதிமுதல் (05/01/2023) வவுனியா தொடக்கம் அநுராதபுரம் வரையான புகையிரத பாதை திருத்த பணிகள் காரணமாக வட மார்க்க புகையிரத சேவைகள் அனைத்தும் கொழும்பு கோட்டை தொடக்கம் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மட்டுப்படுத்தலுக்கு அமைவாக அநுராதபுரத்திலிருந்து உத்தர தேவி காலை 09.15 மணிக்கும் யாழ்தேவி மாலை 2 மணிக்கும், குளிரூட்டப்பட்ட கடுகதி புரைகயிரதம் மாலை 4.10 மணிக்கும், இரவு தபால் புகையிரதம் 11.10 மணிக்கும் சேவையை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கல்கிசை/கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி வழமையான நேரங்களில் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே யாழ்ராணி புகையிரதம் எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் வவுனியா வரை சேவையில் ஈடுபடும் என்றும் அதனடிப்படையில் யாழ்ராணி காங்கேசந்துறையிலிருந்து வவுனியா நோக்கி காலை 6 மணிக்கு சேவையை முன்னெடுக்கும் என்றும் மீண்டும் வவுனியாவிலிருந்து காங்கேசந்துறை நோக்கி மாலை 3 மணிக்கும் புறப்படும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|