வடக்கு மாகாண சபை செயற்பாட்டுத் திறனற்ற சபையாக மாற்றமடைந்து வருகின்றது – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா

வடக்கு மாகாண சபையானது இன்று ஆளும் கட்சியினுடைய உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒர் இடமாகக் காணப்பட்டுவதுடன் அச்சபை செயற்பாட்டு திறனற்ற சபையாக தற்போது மாற்றமடைந்து வருகின்றது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாண சபைகளில் பொதுவான விடயங்கள், மக்களது பிரச்சினைகள் தொடர்பிலுமே உரையாடல்கள் இடம் பெறவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயங்கள் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வடமாகாண சபையானது செயற்பாடற்ற செழிப்பற்ற சபையாகவுள்ளமையை நான் பல முறை ஆதாரங்களுடன் சபையிலே சமர்ப்பித்திருந்தேன். இந்நிலையில், தற்போது நகைச்சுவையான விடயம் என்னவெனில் ஆளும் தரப்பை சேர்ந்த குழுவினருக்கிடையே ஒருசிலர் ஆளும் தரப்புக்கு எதிராகவே நான் கூறிய அதே விடயங்களை குறிப்பிடுவதுடன், முன்னர் நான் கூறும்போது அவற்றை எதிர்த்தமைக்காக பகிரங்கமாக சபை அமர்வுகளில் மன்னிப்பும் கோரியுள்ளனர்.
இத்தகைய செயற்பாடுகளானது செழிப்பான செயற்பாட்டுத் திறனடயை மாகாண சபையாக உருவாகுவதற்கு பொருத்தமற்றதாகும்.
மாகாண சபையானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதற்கு ஆதரவளித்தும் தவறாக செயற்படுகின்றபோது அதற்கு எதிர்ப்பு வெளியிட்டும் தவறுகளை சுட்டிக்காட்டியும் நான் செயற்பட்டிருந்தேன்
ஆனால், இன்று ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் அவர்களையே அவர்கள் எதிர்த்துக் கொள்கிறார்கள். அவ்வாறு அவர்கள் எதிர்ப்பது ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்காகவல்லாமல் தம்மீது தாமே சேறு பூசுவதற்காகவே ஆகும்
பொதுவாக ஜனநாயக ரீதியான பாரம்பரியத்தில் ஒரே கட்சியினுடைய முரண்பாடுகளை சபையிலே கொண்டுவந்து தீர்க்கக்கூடாது. அவற்றை கட்சி மட்டத்திலேயே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். மாகாணசபைகளில் பொதுவான விடயங்களும் மக்கள் பிரச்சினைகளுமே பேசப்படவேண்டும். ஆனால், இன்று வடமாகாண சபையில் ஆளும் கட்சி கூட்டம் நடைபெறுவது போன்றே காணப்படுகின்றது. இதில் எதிர்கட்சிக்கான பங்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
Related posts:
|
|