வடக்கு மாகாண சபையே முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வேண்டுமென்று தடுக்கிறது – M.P.சுமந்திரன்!

Sunday, October 30th, 2016

வடபகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடக்கு மாகாண சபை வேண்டுமென்றே தடுத்துவருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  இதனை முன்னிட்டு வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட கலந்துரயாடல் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன்,  வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும்.
வடக்கில் வாழ்ந்த அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், பிரதியமைச்சர் அமீர் அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஹுனைஸ் பாரூக், அசாத் சாலி உள்ளிட்ட பலர கலந்து கொண்டிருந்தனர்.

Sumanthiran

Related posts:

நடை பாதையில் உறங்கும் நோயாளர்கள் - இடப் பற்றாக்குறையால் வவுனியா வைத்தியசாலையில் அவலநிலை!
வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ நடவடிக்கை - வெளிவிவகார அமைச்சர் சமர்ப...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் -...