வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலருக்கு திடீர் இடமாற்றம்!
Friday, September 4th, 2020வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்றையதினம்முதல் இடமாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அவரது இடத்திற்கு தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இடமாற்றத்தால் ஏற்படும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு பேரவைச் செயலகத்திற்கும் அவர் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
பேருந்து கொள்வனவிற்கு பணம் செலுத்த தயார் - போக்குவரத்து அமைச்சு!
|
|