வடக்கு மாகாண  அதிபர்கள் ஒன்று கூடல்! 

Wednesday, July 20th, 2016

இலங்கை  அதிபர் சேவை பிரமானக் குறிப்பின்படி தகைமை பெற்றவர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் முறையாக நியமனம் பெற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு பாடசாலைகள் இன்னும் வழங்கப்படாமையால் பல்வேறு  சிரமங்களை  எதிர்நோக்கி வருகின்றனர் புதிய அதிபர்கள்.

இதன் காரணமாக நேற்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில்  பல்வேறு காரணங்களை முன்வைத்து வடக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடித் தங்கள் நியமனம் தொடர்பான பிரச்சினைகளை இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக பல நூற்றுக்கணக்கான அதிபர்கள் இந்த கூட்டத்தில் ஒன்று கூடியிருந்தமை சிறப்பம்சமாகும்.

புதிய அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகள் –

  1. இலங்கையில் அண்மையில் புதிதாக பரீட்சைமூலம் நியமனம் பெற்ற தரம் – 3 அதிபர்களுக்கு இதுவரை பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படவில்லை.
  2. அதிபர் தரத்துக்குத் தகுதியான பயிற்சிகளைப் பெற்ற நிலையிலும் – தற்போதும் ஆசிரியர்களாகவே கடைமையாற்றிவருகின்றனர்.
  3. புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் – புதிய தரம்பெற்ற அதிபர்களிற்கு பொருத்தமான நியமனங்களை வழங்குவதில் கரிசனை கொள்ளாது – அரசியல் நலன்களுக்காக தேவையற்ற விடயங்களிலேயே கரிசனை கொண்டுள்ளது.
  4. எதிர்வரும் 22.07.2016 மீண்டும் அமைச்சரவை உபகுழு – அதிபர் நியமனம் தொடர்பாக கூடி ஆராயவுள்ள நிலையில் – தகுதியான அதிபர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தீர்மானம் எடுப்பதற்கு செய்யவேண்டிய செயற்பாடுகள் .

இவ்வாறான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்

வரும் வெள்ளிக்கிழமை 22.07.2016 மதியம் 10.00 மணிக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இலங்கை பூராகவும் தெரிவு செய்யப்பட்ட 4000 அதிபர்களும் ஒன்று கூடி தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு வட மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற தரம் – 3 அதிபர்கள் ஏகமனதாக தாங்கள் அந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொள்ள தீர்வானித்துள்ளனர்.

கொழும்புக்கு செல்ல இருப்பவர்கள் உடனடியாக, உரியவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Related posts: