வடக்கு மாகாணத் திணைக்களங்களுக்கு கணக்காளர்களை நியமிக்க நடவடிக்கை!

Friday, June 15th, 2018

வடக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்கு மேலதிக கடமையாற்றுவதற்கு கணக்காளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண பிரதி முதன்மை செயலரின் நிதிப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள 9 திணைக்களங்களுக்கு இலங்கை கணக்காளர் சேவையை உடைய கணக்காளர்கள் இல்லை. ஆளுநர் செயலகம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு பேரவைச் செயலகம் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சமூக சேவைகள் திணைக்களம் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் கிராம அபிவிருத்தித் திணைக்களம் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் விளையாட்டு திணைக்களம் ஆகியவற்றுக்கு இலங்கை கணக்காளர் சேவையைச் சார்ந்த கணக்காளர்கள் இல்லை.

இந்த திணைக்களங்களின் கணக்கு சார்ந்த விடயங்கள் திணைக்களம் உள்ளடங்கும் அமைச்சின் கணக்காளர் மற்றும் நிதி உதவியாளர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கணக்கு சார்ந்த விடயங்களை அதற்குரிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மேற்கொள்ளுவதே சிறந்தது. இதற்கான ஆளணி அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே ஆளணி உள்வாங்கும் வரையில் தற்போது சேவையாற்றும் இலங்கை கணக்காளர் சேவை கணக்காளர்களை இந்த வேலைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது சேவையாற்றும் கணக்காளர் அவரது திணைக்கள வேலையுடன் கணக்காளர் இல்லாத திணைக்கள வேலையை பகுதி நேரமாக செய்வதற்கு அனுமதிக்கப்படவுள்ளார்.

இந்த மேலதிக வேலையைச் செய்வதற்கு அவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

Related posts:

பிரதமரின் வியட்நாம் விஜயத்தின் மூலம் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது -  வியட்நாம் குடியரசின் பிரதமர் ...
வீட்டுப்பாவனை மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு தெரிவிப்பு!
இன்று முதல் 130 ரூபாவுக்கு சீனி விநியோகம் ஆரம்பம் - இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவிப்பு!