வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது..
அத்துடன் குறித்த தடுப்பூசி 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வவுனியாவிலும் 20 தொடக்கம் 30 வரையானவர்களிற்கான கொரானா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 வயது தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள், இன்று காலை 8 மணிமுதல் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|