வடக்கு மாகாணத்தில் 15,600 ஆசிரியர்கள் -வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!
Monday, January 2nd, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 கல்வி வலயங்களின் கீழ் உள்ள 940 பாடசாலைகளில் தற்போது 15,600 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வலயம் மற்றும் கோட்டத் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் என்பவற்றில் 2,820 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் மொத்தமாக 18,420 பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். அவர்களுக்கான வேதனம், அலுவலகச் செலவுகள், வாகனப் பராமரிப்பு, எரிபொருள், காகிதங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வான செலவினமாக 2016ஆம் ஆண்டில் மீண்டுவரும் செலவினத்தில் 9,300 மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் ஒதுக்கீட்டின் கீழ் மூலதனச் செலவாக 570 மில்லியன் ரூபாவாகவும், உலக வங்கியின் ஊடாக மாகாணத் திறைசேரியின் ஊடாக 465 மில்லியன் ரூபாவும் அனுமதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட 1,425 மில்லியன் ரூபாவில் மாகாண ஒதுக்கீட்டின் 570 மில்லியன் ரூபாவும், உலக வங்கியின் நிதியில் 289 மில்லியன் ரூபாவுமாக 759 மில்லியன் ரூபா ஏற்கனவே கிடைத்துள்ளது. மிகுதி 666 மில்லியன் ரூபாவுக்கான தீர்ப்பகவுகளுக்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் கீழான 1,450 மில்லியன் ரூபாவுக்கான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களினது நிதிப் பங்களிப்பிலான திட்டங்களும் இடம்பெற்றன. அரச சார்பற்ற நிறுவனப் பங்களிப்பின் கீழ் யு.என்.கபிட்டாஸ், சேவ்த சில்ரன் என போன்ற நிறுவனங்களின் ஊடாக பாடசாலைக் கட்டடங்கள், அதிபர், ஆசிரியர் விடுதிகள் என பலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள், வேதனம் என்ற வகையில் வட மாகாண கல்வி அமைச்சில் 2016ஆம் ஆண்டில் மொத்தமாக 12,205 மில்லியன் ரூபா மொத்த செலவினமாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
|
|