வடக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கல்!
Tuesday, March 13th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது-
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலப் பாடத்துக்கான பெறுபேறுகள் தொடர்ச்சியாக குறைந்து செல்கின்றன. உயர் தரம் மற்றும் சாதாரண தரங்களின் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைவோரின் சராசரி வீதம் 33 தொடக்கம் 45 வீதம் ஆகக் காணப்படுகின்றது.
ஆங்கில பாடத்துக்கான வளவாளர்களும் குறைவாகக் காணப்படுகின்றனர். ஆங்கில அறிவை உயர்த்தும் நோக்கில் ஆங்கில ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஒன்று வழங்கப்படவுள்ளது.
Related posts:
கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் அனுமதி!
வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!
அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு சாத்தியமான கொள்முதல் பொறிமுறையின் அடிப்படையில் சுகாதாரத் துறையில...
|
|