வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலை கிளிநொச்சியில் அமைக்கப்படும்!

Friday, August 17th, 2018

கிளிநொச்சியில் வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலை நெதர்லாந்து அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 196 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலையை கிளிநொச்சியில் அமைப்பதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டு அதனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் இந்த மகப்பேற்று வைத்தியசாலையை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டவேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: