வடக்கு மாகாணசபை முன்பாக வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

Tuesday, May 10th, 2016

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று (10) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு போராட்டங்கிளின் பின் தங்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை விரைவில் வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மாகாண சபைக்கு முன்பாக கூடி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடமாகாண சபை அமர்வுகள்  இன்றயை தினம் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்கது.

downloaddownload (1)

Related posts: