வடக்கு மாகாணசபை ஆளுமையோடு நிர்வகிக்கப்படவில்லை – எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு!
Friday, March 5th, 2021வடக்கு மாகாண சபையில் ஆளுமையான முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இருந்திருந்தால் மாகாண வீதிகளை அப்போதே புனரமைப்பு செய்திருக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் எதிர்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
இன்று (05.03.2021) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது ஆளுனர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஹை புரொஜெக்ட் ஊடாக முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்புப் பணிகள் 2014 ஆண்டிலிருந்து திட்டமிடல் பணிகளிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருப்பதுடன், ஆங்காங்கே சில வீதிகள் முன்னேற்ற அறிக்கைகள் இல்லாமலே திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளித்த அதிகாரியின் பதில் திருப்தி தராத நிலையில் திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
இந்நிலையில் ஹை புரொஜெக்ட் வீதி புனரமைப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது வடக்கு மாகாணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரும், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகருமான எஸ் தவராஜா, அப்போதைய மாகாணசபை முதலமைச்சரினால் சரியான முறையில் குறித்த திட்டம் கையாளப்படவில்லை என்பதை அக்காலப் பகுதியில் தன்னால் சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|