வடக்கு மாகாணசபையில் துப்பாக்கிச் சூடு !
Thursday, July 26th, 2018தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சிக்குள் இருக்கும் ஒருவர் பொய் சொல்லுகின்றார் என்பதே உண்மை. அந்த இருவரில் ஒருவர் கூறும் தவறான கருத்தினை நிருபிக்க வேண்டும். மக்கள் துப்பாக்கிகளின் அச்சத்தில் இருந்து தற்போதுதான் ஓரளவு விடுபட்டு இயல்பு நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் இவ்வாறான துப்பாக்கி பிரச்சினைகளை மீண்டும் கதைத்து மக்களை குழப்ப முயற்சிக்காதீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண சபையின் 128 வது அமர்வு இன்று(26) தலைமையில் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் துப்பாக்கி விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பினர்களிடையே பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
கடந்த 127வது விசேட அமர்வின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் அயூப் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்ற கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் பல சர்ச்சைகள் இடம்பெற்று வந்தநிலையில், அனந்தி சசிதரன் துப்பாக்கி விடயம் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளிக்க சபையில் அனுமதி கேரியிருந்தார்.
இதற்கு அவைத்தலைவரினால் அனுமதி வழங்கப்பட்ட போது, அனந்தி சசிதரனின் வார்த்தைப் பிரயோகங்களின் போது, உறுப்பினர் கேசவன் சயந்தன் குறுக்கிட்டு தனது கருத்தினை முன்வைத்த போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
கடந்த 127வது அமர்வு டெனிஸ்வரனின் வழக்கு விசேட அமர்வு, அஸ்மின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று துப்பாக்கி பெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களுடன் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டது.
நான் கையில் ஆயுதத்தினை வைத்திருப்பவளாக இருந்தால், ஆயுதம் வைத்திருப்பதற்கான அனுமதி தொடர்பான முழு ஆதாரங்களையும் சபையில் வெளியிட வேண்டும். சபையை மட்டுமல்ல உறுப்பினர் தவறாக வழி நடத்தியது. எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார்என தெரிவித்தார்.
இதன்போது, சபையில் தனது தன்னிலை விளக்கத்தினை அளித்த உறுப்பினர் அஸ்மின் அயூப் தான் கூறிய விடயம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன்போது, சபையில் கூறப்படும் விடயங்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென்றும், அந்த விடயங்களுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் அவைத்தலைவர் மன்றில் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சபையில் தெரிவித்தார்.
ஆலவட்டம் வீச வேண்டுமென்ற அவசியமில்லை. துப்பாக்கி வேண்டுமென்ற கோரிய கோரிக்கை கடிதம். ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டத்தின் மூலம் பல விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கப்பட்டுள்ளது.வழகம்பரை, பண்ணாகம், சுழிபுரம் என்ற விலாசத்திற்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பேசவில்லை. ஏன் அந்த அமர்வின் போது, நான் ஏன் இவற்றினை குறிப்பிட்டேன் என்பதே முக்கியமானதென்று அஸ்மின் சுட்டிக்காட்டினார். இதன்பொது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இதர உறுப்பினர்களும் தமது கருத்தக்களை முன்வைத்து பேசியமையால் சபை பெரும் பரபரப்பாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|