வடக்கு மக்களும் எமது மக்கள்தான்! – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, August 3rd, 2016
வடக்கும் எமது நாட்டின் ஒரு பகுதி தான். அங்கு வாழும் மக்களும் எமது நாட்டு மக்கள் தான். அவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது தவறா? என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்காகவே முப்படையினருக்கு உரித்தான வெடிப் பொருட்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசத்தில் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை என்ற போர்வையில் வடக்கில் தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பௌத்த தேரர் ஒருவர் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டி செய்தியாளர் இந்த கேள்வியை அமைச்சரிடம் முன்வைத்தார். அக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாநாட்டில் கலந்து கொண்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர இது தொடர்பில் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாதுகாப்பு விடயங்களில் இவ்வாறான வெடிபொருள் களஞ்சியப்படுத்தும் விபரங்களை கூறமுடியாது. அது பாதுகாப்புக்கு உட்பட்ட விடயமாகும் எனவும் தெரிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

Related posts: