வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி பொருத்துமாறு அறிவுறுத்து!

Tuesday, April 30th, 2019

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சி.சி.டி.வி பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்நிலையில் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில் ஒரு கட்டமாக பாடசாலைகளில் சி.சி.டி.வி பொருத்துவதன் மூலம் பாடசாலை வளாகத்தினை அதிபர் கண்காணிப்பது இலகுவானது. அதனால் சி.சி.டி.விக்களை பொருத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts: