வடக்கு – கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி!
Tuesday, July 10th, 2018தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது.
இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
875 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதில் 90 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியளவில் இரண்டாயிரத்து 500 வீடுகளை மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி இன்று !
தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் மீண்டும் மக்களிடம் எடுத்தச...
செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி ந...
|
|