வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்
Monday, April 4th, 2016வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலதிக கொடுப்பனவிற்கான நேரம் மாதத்திற்கு 80 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகுதிகாண் வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் மாலை 4 மணிக்கு பின்னர் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை என சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யவே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளி வெளியாகும...
இலங்கை - இந்தியா இடையே நீருக்கு அடியில் மின் இணைப்பு கேபிளை இணைப்பதற்கு இணக்கப்பாடு!
|
|