வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Friday, July 16th, 2021

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் – எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களுக்கான தடுப்பூசி செலத்தும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ என்னுடன் கலந்துரையாடியதை அடுத்து இந்த பிரத்தியேகத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

மேற்படி திட்டத்தின்படி – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக யாழ் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசகளை வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கிணங்க 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கான முதற்கட்டமாக  வடங்கப்பட்டிருந்த நிலையில் அமை கடந்த மே மாத இறுதியில் மக்களுக்கு செலுத்தப்பட்டன.

அதன் பின்னர் கடந்த ஜுன் மாதம் அதற்கான இரண்டாவது செலுத்துகையும் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் முதற் செலுத்துகையாக ஆசிரியர்கள் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென கடந்தவாரம் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகைதந்திருந்தபோது குறித்த திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் குறித்த திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: