வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் – ஜனாதிபதி !
Saturday, December 14th, 2019வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை புரிந்துணர்வின் மூலம் உயர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டொசிமிட்சு மொடகியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இலங்கையுடன் சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் என்பவற்றில் தொடர்புகளை பேணும் என ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்து சமுத்திர பிராந்தியம், பிரச்சினைகளுக்கு அப்பால் சமாதான வலயமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதுடன், வெளிநாட்டு உறவுகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதுடன், உட்கட்மைப்பு வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்
Related posts:
|
|