வடக்கு, கிழக்கு நீதிபதிகள் இடமாற்றம்!

Wednesday, June 13th, 2018

வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் கடமைபுரியும் நீதிபதிகள் 12 பேருக்கு நீதிச்சேவை ஆணைக்குழு செயலகத்தினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 18ஆம் திகதி நியமிக்கப்பட்ட இடங்களுக்கு நீதிபதிகளை செல்லுமாறும் நீதிச்சேவை ஆணைக்குழுச்செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு நீதவான் எம்.கணேஷராஜா, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கும் கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய டி,ஜே.பிரபாகரன், மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கும் மன்னார் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ஏ.ஜீ.அலக்ஷ்ராஜா, மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா, மல்லாகம் நீதிமன்றத்திற்கும் ஜே.கருப்பையா அவிஸ்ஸாவெல நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கும் செல்லவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றிய 12 நீதிபதிகளின் பெயர் விபரங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் “நீதிச்சேவை ஆணைக்குழு செயலகம்” எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: