வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானச்சீட்டு!

Sunday, November 20th, 2016

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்த நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவர்களிடம் மேலதிக பொறுப்புணர்வுகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.அவர்களுக்கு தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு 1 லட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

அமெரிக்கா, இந்தியாவில் விமானப் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. வடக்கு கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம், விமானப்பயண வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

fcba083a18ddae96865320de580b90a4_XL

Related posts: