வடக்கு, கிழக்கு இளைஞர்களுக்கு இராணுவத்தில் தொழில் வாய்ப்பு!
Sunday, June 24th, 2018
இலங்கை இராணுவத்தில் இந்த வருடம் சுமார் 13 ஆயிரத்து 193 பேரை இணைக்கவுள்ளதாக இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தின் பல பிரிவுகளை விலக்கிக் கொள்ள எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அத்துடன் எந்தவொரு இராணுவ முகாமையும் மூடத் திட்டமில்லை அவ்வாறு வெளியான செய்திகள் தவறாகும். பொதுமக்களைத் தவறாக வழி நடத்த முயற்சிக்கும் அதிருப்தி அரசியல் குழுக்களின் செயற்பாடே இதுவாகும். வடக்கு கிழக்கில் இணைப்பு செயல்முறைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போருக்குத் தயார் நிலையிலும், எல்லா நேரத்துக்கும் உகந்த மூலோபாய மற்றும் நடவடிக்கை செயற்பாட்டு மட்டத்தை குறைய விடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த இணைப்பு செயல்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை இராணுவம் தற்போது ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த வருடம் 213 அதிகாரிகள், 8 ஆயிரத்து 631 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களை நிரந்தரப் படைப்பிரிவுக்கும், 97 அதிகாரிகள் மற்றும் 4252 படையினரைத் தொண்டர் படைப்பிரிவுக்கும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts: