வடக்கு கிழக்கில் 3 காற்றாலை உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை!

Thursday, May 30th, 2019

வடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த மாதம் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மன்னார், பூநகரி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில்  இந்தக்காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் தகவலின் படி மன்னார், மற்றும் பூநகிரியில் அமைக்கப்படும் காற்றாலை மூலம் 300 மெகாவோற்ஸ் மின்சாரமும் மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மூலம் 100 மெகாவோற்ஸ் மின்சாரமும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு சர்வதேச நிறுவனங்களிடம் கேள்வி கோரலை முன்வைத்துள்ளது.

Related posts: