வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் – அரசாங்கம்!

Sunday, April 12th, 2020

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டினை போக்குவதற்கு வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பகுதிகளில் அதிக நெல் விளைச்சல் பகுதிகளை அடையாளம் காண்பதற்கு இராணுவத்தினை பயன்படுத்தவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல் ஆலைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்திருந்த நிலையில் அரசாங்கம் தற்போது இந்த நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.

அதன்படி வடக்கு கிழக்கில் அதிக நெல் உற்பத்தினையை மேற்கொள்ளவும் அங்கு களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஆரம்பித்து உற்பத்தியை பெருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கில் உள்ள விவசாய காணிகள் தொடர்பாக இராணுவத்திடம் இருக்கும் தரவுகளை பெற்றுக்கொள்ளவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன் அவற்றில் முழுமையான பயன்களை பெற துரித நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைத்த நிதியினை விடுவித்து நாட்டின் சகல பகுதிகளிலும் விவசாயத்தை மேக்கொள்ள விசேட வேலைத்திட்டத்தினையும் முன்னெடுக்க அவர் பணிப்புரை விடுத்துள்ளார்

Related posts: