வடக்கு – கிழக்கில் தாதியருக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Thursday, June 7th, 2018

வட கிழக்கு மாகாணங்களில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களையும் கோரவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எந்தத் துறையிலேனும் சித்தி பெற்றவர்கள் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

தற்போது நாடெங்கிலும் 31 ஆயிரம் தாதிகள் கடமையாற்றுவதாகவும் 7,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாதிகள் சேவைக்கு விஞ்ஞான துறையில் கற்றோர் விண்ணப்பிக்காததாலேயே ஏனைய துறையினரையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கென அமைச்சரவை அனுமதி, அரசாங்க சேவை ஆணைக்குழு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: