வடக்கு – கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்பு!

வடக்கு கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு தருவிக்கப்பட்ட கப்பலில் 650 பேர் பயணிக்கும் வசதி கொண்ட நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்மிற்கு பயணித்தனர்.
இவ்வாறு பயணிக்கும் கப்பலில் இந்தியாவில் இருந்து பல்வேறு தேவைகளிற்காகவும் இலங்கை வந்த நிலையில் கொரோனா காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் நாடு திரும்ப முடியாத 650 பேர் பயணித்துள்ளனர்..
தூத்துக்குடி துறைமுகத்திற்கு பயணிப்பதனால் அதிகமானோர் தமிழர்களே பயணிக்கும் நிலையில் வடக்கில் தங்கியிருந்த 224 இந்தியர்களும் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்த 195 பேரும் உள்ளடங்கலாகவே இன்று பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
40 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்!
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜ...
|
|