வடக்கு , கிழக்கில் சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியம் என்கின்றார் பிரதமர்!

வடக்கு , கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை, மிகப்பெரும் பாக்கியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், மக்கள் பயமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்களை கையிலெடுத்த பயங்கரவாதிகளுக்கு எதிராகவே அரசாங்கம் போரிட்டது என்றும் தமிழ் மக்களுடன் அரசாங்கம் போரிடவில்லையெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்தகாலத்தில் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் இணைத்து சிறுவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிட்டனர் என தெரிவித்த பிரதமர் அவற்றை அகற்றக்கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|