வடக்கு – கிழக்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை – யாழ் பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!
Wednesday, November 24th, 2021வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமைவரை தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 27.11.2021 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
இதேவேளை மீனவர்கள் எதிர்வரும் 27.11.2021 வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதது.
Related posts:
|
|