வடக்கு – கிழக்கில் இறப்பர் செய்கை – பெருந்தோட்ட அமைச்சு!

Friday, May 11th, 2018

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறுதோட்ட இறப்பர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலான விலையை பெற்றுக் கொள்வதற்கு தற்போது நவீன தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு உதவுவதற்கு நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார்.

மேலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இறப்பர் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: