வடக்கு – கிழக்கில் அடுத்து வரும் மாதங்களில் காத்திருக்கும் ஆபத்து!

Monday, April 10th, 2017

சித்திரை சிறுமாரி பொய்த்தால் மிகப் பெரிய நீர்ப்பிரச்சினையை வடக்கு கிழக்கு அடுத்து வரும் மாதங்களில் எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமென யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வருடமும் இக் காலப்பகுதியில் சூரியன் நாட்டின் மேலாக உச்சம் கொடுப்பது வழமையான விடயம். அதாவது சூரியன் இலங்கைகக்கு மேலாக கிட்டத்தட்ட 90 பாகை கோணத்தில் உச்சம் கொடுப்பதால், கதிர்ஒளி கால அளவு மற்றும் கதிர் வீச்சின் அளவு அதிகமாக காணப்படும் இதனால் இக் காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு உயர்வாகவே இருக்கும். கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இம்முறை வெயிலின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றமைக்கு மழை வீழ்ச்சி குறைவாக இருந்தது. இதனால் மார்ச் 20க்கு முன்னர் பெருமளவு மேற்பரப்பு நீர் ஆவியாகிவிட்டது மேலும் அதிகரித்த கட்டுமானத்தால் கட்டிடங்கள் உறிஞ்சி வெளியிடும் வெப்பத்தின் அளவு கூடவாகவுள்ளதால் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவு குறைவடைகின்றது. இதனால் இம்முறை வெப்பத்தை அதிகளவில் உணர முடிகின்றது.

Related posts: