வடக்கு எம்.பிக்கள் எண்ணிக்கை மாற்றமில்லை!
Thursday, December 7th, 2017
2017 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வடக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாத்தறை மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகும் நிலையில் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அந்த எண்ணிக்கை 7 ஆகக் குறைவடைந்துள்ளது.
அந்த ஒரு உறுப்பினருக்கான ஆசனம் மொனராகலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதுவரை 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்த மொனராகலை மாவட்டத்தின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நிரந்தர தீர்வுகளை வென்றெடுத்துத்தரும் வல்லமை கொண்ட தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின்...
சீன சேதனப்பசளை விவகாரம் - 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் ஜோன்...
16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறை கைதிகள் தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்!
|
|